சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலில் பழகிய தூத்துக்குடி வாலிபர் ஒருவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நெற்குன்றம் பகுதியை சேந்த பெண் ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழகத்தை ஏற்படுத்தியதோடு, அவருடன் ஆபாசமாக வீடியோ காலில் பேசுவதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
பின்னர், ஒரு கட்டத்தில் அந்த வாலிபர், வேறு யாருடனும் தொடர்பில் இருக்க கூடாது. என்னிடம் மட்டுமே பேச வேண்டும். நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் எனக் கூறி தனது கட்டுபாட்டுக்குள் நெற்குன்றம் பெண்ணை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண்ணின் வாட்ஸ் ஆப்புக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி அது போன்று செயல்பட வேண்டும் எனவும் அந்த வாலிபர் மிரட்டி இருக்கிறார். தனக்கு 2 மகள்கள் இருப்பதால் பயந்து போன அந்த பெண், தூத்துக்குடி வாலிபர் உடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
ஆனால், தூத்துக்குடி வாலிபர் பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு என்னுடன் உங்கள் தங்கை தொடர்ந்து தொடர்பில் இல்லா விட்டால் அவரது புகைப்படங்களையும் 2 மகள்களின் போட்டோக்களையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டுவிடுவேன் என்று கூறி தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார். ஆனால், எதற்கும் அந்த பெண் சம்மதிக்காததால் மகள்களை கொன்று விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறாராம். இதனால் பயந்து போன நெற்குன்றம் பெண் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணுக்கு ஆபாச தொல்லை கொடுத்த வாலிபரின் உண்மையான பெயர் கோபி என்பது தெரிய வந்தது. மேலும், தூத்துக்குடி நியூகாலனி முனியசாமிபுரம் பகுதியை சேர்ந்தரான அவர், சரவண விக்ரம் என்ற பெயரில் நிற்குன்றம் பெண்ணுடம் பழகி பாலியல் மிரட்டல் மற்றும் தொல்லையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சென்னை தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்து சென்று கோபியை கைது செய்து விசாரணை நடத்தினர். கைதான வாலிபர் கோபி 5 முகநூல் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஆகியவற்றை போலியாக பல பெயர்களில் உருவாக்கி வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அவர் இது போன்று பெண்கள் பலருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் தான் சென்னை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
பெண்களின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் ஆகிய பக்கங்களுக்கு நண்பர் ஆவதற்கான பரிந்துரை செய்வதை வழக்கமாக வைத்துள்ள கோபி, பெண்களுடன் பழகத் தொடங்கிய பிறகு அவர்களை ஆபாச வலையில் வீழ்த்தி உள்ளார் .
தனது போலியான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாக10க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர் மன்மத ஆபாச லீலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக வாலிபர் கோபியை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர் எத்தனை பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய இளம் பெண்கள் பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் ஆகிய சமூகவலைதளங்களில் மூழ்கி கிடக்கிறார்கள். முகம் தெரியாத நபர்களுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் யார் என்றே தெரியாத முகம் தெரியாத ஆண்களுடன் பழகி தவறான வழிகளுக்கும் சென்று விடுகிறார்கள். இது போன்ற பெண்களை குறிவைத்து வாலிபர்கள் பலர் போலியான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களை தொடங்கி வலை விரித்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலில் பழகிய தூத்துக்குடி வாலிபர் ஒருவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



