• vilasalnews@gmail.com

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க நடந்தேறிய நாடகம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார்.


கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது ஊருக்குக் செனறுள்ளார். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை அருகில் வந்த போது, பின்னால் வந்த கார் ஒன்று, ரவிராஜ்குமாரின் பைக்  மீது மோதியது.


இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். மேலும், ரவிராஜ்குமார் மீது மோதிய கார் அதே தேசிய நெடுஞ்சாலையில் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.


இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.


விபத்து ஏற்படுத்திச் சென்ற கார் சிறிது தூரம் சென்ற போது அந்தக் காரில் உள்ள நம்பர் பிளேட் துணியால் மறைக்கப்பட்டுச் சென்ற போதிலும், அந்தக் காரின் நிறத்தை வைத்து அக்காரைத் தேடி வந்தனர்.


இந்நிலையில் அந்த கார், ஒரு லாரியில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் ஏற்றிச் செல்வதை, அங்குள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கண்டுபிடித்தனர்.


இது குறித்து அந்த லாரியின் பதிவு எண்ணை வைத்து அந்த காரின் உரிமையாளரான அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியைச் சேர்ந்த க.சோலைச்சாமி என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.


விசாரணையில், அந்த காரை எட்டையபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியதாகக் கூறியுள்ளார்.


சந்தேகத்தின் பேரில் தர்மராஜைக் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், குறுக்குச்சாலையில் விபத்து ஏற்படுத்திச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.  


விபத்து வழக்கில் இருந்து போலீஸாரிடம் சிக்காமல் இருக்க அந்தக் காரை அருண்குமார், சுப்புராஜ் ஆகியோர் உதவியுடன் காரை கார் புரோக்கரான சோலைச்சாமிக்கு விற்பனை செய்துள்ளார்.


அந்தக் கார் விபத்தில் இருந்து தப்பிக்க தர்மராஜ், சோலைச்சாமி இருவரும் விபத்து நடந்த இரு நாட்களுக்கு முன்பு விற்பனை செய்துவிட்டதாக ஒப்பந்தப் பத்திரம் தயார்ப்படுத்தியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இச்சம்பவம் குறித்து தர்மராஜ், சோலைச்சாமி, அருண்குமார், சுப்புராஜ் ஆகியோரைக் கைது செய்ததுடன், கார் மற்றும் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  • Share on

பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூத்துக்குடி வாலிபர் கைது!

தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

  • Share on