ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கான ப்ராஜெக்ட் எக்ஸ்போ நடைபெற்றது.
இதில் மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். 20க்கும் மேற்பட்ட குழுக்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
கல்லூரி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ராஜரத்தினம் ப்ராஜெக்ட் எக்ஸ்போவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட இடிஐ ஒருங்கிணைப்பாளர் சுபைதரன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட இடிஐ ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி ஆகியோர் தலைமை விருந்தினராக பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் வரதவிஜயன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய இயக்குனர் முனைவர் அருண்மொழிச் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை பிற மாணவர்கள் கண்டு கற்றுக் கொண்டனர்.



