• vilasalnews@gmail.com

2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களா நீங்கள்? தூத்துக்குடி கலெக்டர் தகவல்!

  • Share on

பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜீன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைப்பெற்று வருவதால் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்லைவர் இளம்பகவத்  கேட்டுக்கொண்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் 1505 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றது. 


குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவருக் கல்வி செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. 


இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர்.


அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜீன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைப்பெற்று வருவதால் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

ஓட்டப்பிடாரத்தில் ஜமாபந்தி... இறுதி நாளில் நடந்தது!

ஹோலிகிராஸ்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ ப்ராஜெக்ட்‌ எக்ஸ்போ!

  • Share on