ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிடும் நபர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன் தலைமையில், அந்த இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் மாரியப்பபாண்டியன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் தலைவராக உள்ளேன். மேலும் நான் தேவேந்த்திர குல வேளாளர் சமூக மக்களின் உரிமைக்காக மக்கள் வளர்ச்சிக்காக இன்று வரை போராடி வருகிறேன் .
தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் இருந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சண்முகையா மக்கள் பணி செய்து வருகிறார்.
அவரது அயராத மக்கள் பணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த ஆறு மாதங்களாக வாட்ஸ் ஆப் வழியாக அவதூறு பரப்பும் வகையில் குருஞ்செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 16.05.2025 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மீது அவதூறு செய்திகளைபரப்பிகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்கள் தங்களிடம் மனு அளித்திருந்தையும் நான் அறிவேன்.
ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள நபர்களை சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி இச்சம்பவத்தில் எம்.எல்.ஏ சண்முகையாவுக்கும் தொடர்பு உள்ளது என உண்மையில்லாத பொய் செய்திகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா என்பவரும், அக்ரி பரமசிவன் என்பவரும் கூட்டு சேர்ந்து கொண்டு அவதூறு செய்திகளை வாட்ஸ் ஆப் குரூப்களில் 8015176060, 9843739305 ஆகிய எண்களில் இருந்து பரப்பி வருவதாக எனக்கு தெரிய வருகிறது.
இது போன்று தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பொய் செய்திகளை மக்களிடையே பரப்பி அசாதரண சூழ்நிலையை உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனையை தூண்ட காரணமாக உள்ள ஒட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா மற்றும் அக்ரி பரமசிவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கேட்டுக்கொள்கிறேன். என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



