தூத்துக்குடியில் டாஸ்மாக் பார் அருகே கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில், எட்டையபுரம் சாலையில் டாஸ்மார்க் மதுபான கடை மற்றும் பார் அருகில் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று ரத்தக் காயத்துடன் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
அவரது இடது கையில் முருகன் என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவரது தலையில் காயம் இருந்தது. அவர் வாகனம் மோதி இறந்தாரா? அல்லது மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் யாரேனும் கொலை செய்தனரா என்பது தெரியவில்லை. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக சங்கரப்பேரி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




