• vilasalnews@gmail.com

தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடை விழா அன்னதானம் : முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா கடந்த 13ஆம் தேதி கால் நட்டு வைபவத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரணை நடந்தது. கொடை விழாவை முன்னிட்டு நேற்று இரவு மாகாப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இன்று ( மே 20 )  காலை கணபதி ஹோமம் கும்ப பூஜை, பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார தீபாரதனை கஞ்சி வார்த்தல் நடைபெற்றது.


பின்னர்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், 39வது வட்ட செயலாளருமான  திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் சுமார் 4000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி  சண்முகநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.


இதில் அதிமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சுதாகர், வழக்கறிஞர் சரவணப்பெருமாள், டைகர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் வங்கி மேலாளர் மீது தாக்குதல் : திமுக பகுதி செயலாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு!

தூத்துக்குடியில் பதற வைத்த சடலம்... தலையில் வெட்டு காயம் : கொலையா? விபத்தா? போலீசார் விசாரணை!

  • Share on