கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க, தமிழக வெற்றிக் கழகம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம், திருச்செந்தூர் நகரத்திற்குட்பட்ட ஆலந்தலையில் 25 மற்றும் 26 வது வார்டு கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று ( 18.05.2025 ) நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்
மாவட்ட இணைச்செயலாளர் விஜய் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைசெயலாளர் சிவனேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், ஆறுமுகநேரி பேரூர் செயலாளர் நிவாஸ் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரோகினி, ஆறுமுகநேரி பேரூர் இணைச்செயலாளர் பிரகாஷ், திருச்செந்தூர் குட்டி, ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, திருச்செந்தூர் ஒன்றிய துணைச்செயலாளர் விவேக், வீரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி சர்க்கார் மதன், உடன்குடி ஜிம் ரவிச்சந்திரன், குலசை கராத்தே அமலன், மணப்பாடு விவியன், ரஞ்சன், இருதயராஜ், பிரதீப், செபஸ்தியான், கேஜீஸ் மற்றும் ஆலந்தலை 25 மற்றும் 26 வது வார்டு நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட, திருச்செந்தூர் சட்டமன்ற, ஒன்றிய , நகர , பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



