பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்த மாணவிகள் மற்றும் பெற்றோர்களை இழந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் என அனைவரையும் வாழ்த்தி கல்வி உதவி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்திருக்கிறார் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 498மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற, புதியம்புத்தூரை சேர்ந்த மாணவி ரேஷ்மா, 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற, தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ஜெர்லின் ரக் ஷனா மற்றும் பெற்றோர்களை இழந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த மாணவி ஹர்ஷினி உள்ளிட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தன்னுடைய இல்லத்திற்கு நேரில் அழைத்து, கேக் வெட்டி, சால்வை அணிவித்து, கல்விக் ஊக்க தொகை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.



