• vilasalnews@gmail.com

சிறந்த மதிப்பெண்... மாணவன் பொன் பாலமுருகனுக்கு பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு பாராட்டு!

  • Share on

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், சிறப்பான மதிப்பெண் எடுத்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சா வழியைச் சார்ந்த  மாணவன் பொன் பாலமுருகனுக்கு பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு  பொது தேர்வில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சா வழியைச் சார்ந்த, தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் கருணாகரன் - காளீஸ்வரி ஆகியோரது மகனான பொன் பாலமுருகன் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்களும், கணிதத்தில் 98 மதிப்பெண்களும், அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 100 மதிப்பெண்களும் என மொத்தம் 500 க்கு 493 மதிப்பெண்கள் பெற்றார்.


இதனையடுத்து, சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவன் பொன் பாலமுருகனுக்கு பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலய வளாகத்தில் வைத்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு சார்பில் நிர்வாகிகள் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்கள். 


இந்நிகழ்ச்சியில், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

மாநில அளவில் 2 வது இடம்... சாதித்த புதியம்புத்தூர் தூய்மை காவலரின் மகள்!

வறுமையிலும் சாதனை... அழைத்து பாராட்டி உதவிய தவெக அஜிதா ஆக்னல்!

  • Share on