• vilasalnews@gmail.com

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்... தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!

  • Share on

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் தூத்துக்குடி சிவன் கோவிலில் நடைபெற்ற பூர்ண கும்ப பூஜையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.


அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின்  71வது  பிறந்த நாளை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுள் பெற வேண்டியும், எல்லையில் நாட்டை காக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்காகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் ஏற்பாட்டில் தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் அதிமுக மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் ஆயுஸ் ஹோமம், மற்றும் பூர்ணகும்ப சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


இந்நிகழ்வில், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுணரணி செயலாளர் இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூமணி, சார்பு அணி  செயலாளர்கள் எம் பெருமாள், டேக் ராஜா, கே.ஜெ.பிரபாகர், நடராஜன், தனராஜ், அருண் ஜெபக்குமார், சத்யாலெட்சுமணன், மண்டல தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் கல்விக்குமார், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் சரவண பெருமாள், முனியசாமி, சிவசங்கர், ராஜ்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாணவர்அணி துணைத் தலைவர் முகமது காலிப் உசேன், முத்துக்குமார் ரியாஸ்,  பரிபூரணராஜா, சுந்தரேஸ்வரன், டைகர்சிவா, ஜான்சன் தேவராஜ், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், லட்சுமணன், மனுவேல்ராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் ராஜேஸ்வரி, இந்திரா, சாந்தி, மெஜிலா, ராதா ஆனந்த், தமிழரசி, அன்னபாக்கியம், ஷாலினி, தளவாய், பிரகாஷ், கே.கே.பி.விஜயன், ரயில்வே மாரியப்பன், மிக்கேல், கண்ணன், சக்திவேல், பொன்னம்பலம், செல்வமாரியப்பன், சொக்கலிங்கம், சந்தனபட்டு, செல்வராஜ், சுப்பிரமணி, யுவன்பாலா, இம்ரான், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, உதயா உள்ளிட்ட  ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

  • Share on

தேவதைகளாக வந்து நின்ற திருநங்கைகள்.. அழகியாக மகுடம் சூடிய தூத்துக்குடி திருநங்கை!

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி கொடுத்த பிரஸ் மீட்... இது தான் விஷயம்!

  • Share on