• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி கொடுத்த பிரஸ் மீட்... இது தான் விஷயம்!

  • Share on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது என்று கனிமொழி எம்பி கூறினார்.


திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 


பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்த கொடுமைக்கு வழங்கப்பட்ட நியாயமான தீர்ப்பு. குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 


பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் வெளியிடாமல் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்தத் தீர்ப்பினால் பெண்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் பாலியல் வன்கொடுமை வளர்ச்சிக்கு சிபிஐக்கு மாற்றி தண்டனை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அது நிறைவேறி உள்ளது.


அதிமுக ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர் அதன் அடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பாலியல் குற்றங்களுக்கு எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தன்னுடைய நிர்வாகமே விசாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாம், எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை. இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தம், போராட்டங்களால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார்.


தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக தற்போது உள்ளது. இன்று அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும். அதிமுக ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு நல்ல தீர்ப்பு என்று தெரிவித்தார்.

  • Share on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்... தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் தூத்துக்குடி சிவன் கோவிலில் சிறப்பு பூஜை!

இரவோடு இரவாக சென்ற சண்முகையா எம்.எல்.ஏ!

  • Share on