தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 45வது வார்டுக்கு உட்பட்ட கட்டபொம்மன் நகர் 12 வது தெருவில் நான்கு சாலைகள் சந்திக்கும் மையப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகவே, கட்டபொம்மன் நகர் 12வது தெரு நான்கு சாலைகள் சந்திக்கும் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமிடம் மதிமுக மாநகர செயலாளர் போ.முருகபூபதி தலைமையில், மதிமுக நிர்வாகி பேச்சிராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் சரவணப்பெருமாள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, தங்களது கோரிக்கை மீது துரித நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கு அமைத்து தருவதாக கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில், நேற்று ( 7.5.25 ) தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மதிமுக மாநகர செயலாளர் திரு.முருகபூபதி, திமுக வட்ட செயலாளர்கள் சுரேஷ், சரவணன், முன்னாள் மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வட்ட துணை செயலாளர்கள் கணேசன், பக்கிரி சாமி, மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், வட்ட பிரதிநிதிகள் சேவியர், சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, அங்குள்ள இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



