அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் பயின்று முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தக பை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன் உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி,
திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞரணி மணிகண்டன், சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



