• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் புதிய 20 வழித்தடங்களில் மினிபேருந்துக்களை இயக்க விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியா்!

  • Share on

தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.012025-ன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும், புதிதாக கண்டறியப்பட்ட 20 வழித்தடங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டு, சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500:100=1600 மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ.600 ஆக மொத்தம் ரூ.2200 செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 05.03.2025-க்குள் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.


1.ஹார்பர் வாட்டர் டேங் முதல்

புதுக்கோட்டை மொத்த நீளம் – 24.4கி.மீ

2.பழைய பேருந்து நிலையம் முதல் காலாங்கரை மொத்த நீளம் - 23.4.கி.மீ

3.திரேஸ்புரம் முதல் அய்யனடைப்பு

சண்முகபுரம் மொத்த நீளம் -125 கி.மீ

4.முள்ளக்காடு முதல் திரேஸ்புரம் மொத்த நீளம் - 21.3 கி.மீ

5.F.C.I. குடோன் ரவுண்டானா முதல் பழைய பேருந்து நிலையம் மொத்த நீளம் – 10.5 கி.மீ

6.பழைய பேருந்து நிலையம் முதல் ஜோதி நகர் மொத்த நீளம் - 9.8 கி.மீ


7.தேரியூர் முதல் திருச்செந்தூர் வரை மொத்த நீளம் - 16.1 கி.மீ.

8.சோனகன் விளை முதல் காயல்பட்டணம் வரை மொத்த நீளம் - 13.4 கி.மீ.

9.பழையகாயல் முதல் வனதிருப்பதி வரை மொத்த நீளம் - 23.5 கி.மீ

10.திருச்செந்தூர் முதல் செட்டியாபத்து

வரை மொத்த நீளம் - 19.5 கி.மீ

11.திருச்செந்தூர் MLA அலுவலகம் முதல் உடன்குடி பேருந்து நிலையம் வரை மொத்த நீளம் - 20.4 கி.மீ

12.உடன்குடி முதல் மெஞ்ஞானபுரம் (ஆணையூரி) வரை மொத்த நிளம் - 19.7 கீ.மீ.


13.குளத்தூர் முதல் சோழபுரம் வரை

மொத்த நீளம் - 24.5 கி.மீ

14.வேலாயுதபுரம் முதல் அரியநாயகிபுரம் வரை மொத்த நீளம் – 12.3 கி.மீ

15.எட்டையாபுரம் முதல் ஈராச்சி வரை மொத்த நீளம் - 8.9 கி.மீ

16.எட்டையபுரம் முதல் கடலையூர் வரை மொத்த நீளம் – 12.5 கி.மீ

17.எட்டையபுரம் பேருந்து நிலையம்

முதல் கருப்பூர் வரை மொத்த நீளம் – 14.2 கி.மீ

18.கட்டலாங்குளம் முதல் கயத்தார் பிரிவு வரை மொத்த நீளம் – 15 கி.மீ

19.கயத்தார் பஸ்நிலையம் முதல் செட்டிகுறிச்சி வரை மொத்த நீளம் - 22.5 கி.மீ

20.வேடநத்தம் முதல் வேப்பலோடை வரை

மொத்த நீளம் – 13.3 கி.மீ


மேலும், SCPA Form with fees of Rs. 1500.100.600/-, Address evidence, Road worthy certificate from A.E/D.E. Highways, Tentative timings, Route -Map/Sketch, Solvency Certificate ஆகிய ஆவணங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி கொத்தனாரை தாக்கி கொல்ல முயற்சி : 4 பேர் கைது!

  • Share on