• vilasalnews@gmail.com

10 கோடி மதிப்புள்ள 16 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் ; லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

  • Share on

தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கடத்த இருந்த சுமார் 10 கோடி மதிப்பிலான 16 டன் செம்மரக் கட்டைகள் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாட்டிற்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து

தூத்துக்குடி பாளையங்கோட்டை நான்குவழிச் சாலையில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது TN04 AF 6933 என்ற நம்பர் கொண்ட கண்டெய்னர் லாரியை அதிகாரிகள் மடக்கினர் ‌.  அதிகாரிகளை கண்டவுடன் லாரியிலிருந்து டிரைவர் தப்பி ஓடியுள்ளார்.  இதைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்கையில் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து செம்மரக் கட்டைகளையும் மற்றும் லாரியையும் பறிமுதல் செய்து, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி அருகேயுள்ள ஏ.எல்.எஸ் என்ற தனியார் கண்டெய்னர் தளத்திற்கு கொண்டு வந்தனர்.  முதற்கட்ட விசாரணையில் சுமார் தேங்காய் ஏற்றுமதி என பதிவு செய்து 40அடி நீளம் கொண்ட கண்டெய்னர் சுமார் 10 கோடி மதிப்புள்ள 16 டன் செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மத்திய  வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.241.54 கோடி : நிர்வாக இயக்குனர் கே.வி.ராமமூர்த்தி தகவல்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் : ஓட்டப்பிடாரம் தொகுதியில் சிறப்பு முகாம் விறு விறு!

  • Share on

அண்மை பதிவுகள்