• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஆதாரில் பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்களை செய்ய இனி கவலை வேண்டாம்.. இதோ எளிய வழி!

  • Share on

தூத்துக்குடியில் தலைமை அஞ்சலகங்களில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரையிலும் பிற துணை அஞ்சலகங்களில் அலுவலக வேலை நேரத்திலும் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில், "இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பல பயனுள்ள சேவைகளை வழங்குவதில் எப்பொழுதும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த வகையில் இந்திய அஞ்சல் துறை UIDAI- யோடு (Unique Identification Authority of India) இணைந்து ஆதாரில் பெயர், முகவரி மற்றும் பயோமெட்ரிக் போன்ற திருத்தங்களை அஞ்சல் அலுவலகங்களில் செய்து வருகிறது. 

இந்த வசதி தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களான தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அஞ்சலகங்களிலும் மற்றும் துணை அஞ்சலகங்களான சிதம்பரநகர், மேலூர், கோரம்பள்ளம், நியூ காலனி, முத்தையாபுரம், மில்லர்புரம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டணம், ஏரல், குலசேகரபட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியாநகரம், வல்லநாடு, ஆனந்தபுரம், புன்னக்காயல், கொம்மடிக்கோட்டை, முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர், ஹார்பர்எஸ்டேட், படுக்கப்பத்து ஆகிய அஞ்சலகங்களிலும் செயல்பாட்டில் உள்ளது.

அனைத்து சேவைகளுக்கும் இன்றைய கால கட்டத்தில் ஆதார் தேவைப்படுகிறது. ஏற்கனவே ஆதார் வைத்திருக்கும் மக்களுக்கு ஆதாரில் பல திருத்தங்கள் செய்வது அவசியமாக உள்ளது. ஆதாரில் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் கைபேசி எண் திருத்தம் செய்வதற்கு பல லட்சக்கணக்கானோர் தினந்தோறும் விண்ணப்பிக்கின்றனர். 

மேலும் பத்து வருடங்கள் நிறைவுற்ற ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. எனவே பொது மக்கள் மற்றும் பணிக்கு செல்வோருக்கு ஏதுவான நேரங்களில் ஆதார் சேவை அஞ்சலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதி அனைத்து தலைமை அஞ்சலகங்களில் காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணிவரையிலும் பிற துணை அஞ்சலகங்களில் அலுவலக வேலை நேரத்திலும் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கருவிழி, கைரேகை மற்றும் புகைப்படம் புதுப்பித்தல், பெயர் , முகவரி, பாலினம், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் திருத்தம் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சு. முனிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share on

எப்போதும்வென்றான் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

தூத்துக்குடியில் 35 லட்சம் மதிப்புள்ள 1 ஏக்கர் 6 செண்ட் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்த இருவர் கைது!

  • Share on

அண்மை பதிவுகள்