• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தஞ்சாவூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்

  • Share on

தஞ்சாவூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், 3ம் மைல் பகுதியிலிருந்து காரில் வேளாங்கண்ணிக்கு செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் 20.01.2024 அன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (வயது 62) த/பெ.யாகப்பதேவர், ஞானம்மாள்(வயது 60) க/பெ.அந்தோணி, ராணி (வயது 40) க/பெ. மாசாணம் மற்றும் சின்னபாண்டி (வயது 40) த/பெ.முருகையா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் விபத்தில் உயிரிழந்த நால்வரின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் காசோலையினை வழங்கினார். இந்நிகழ்வின்போது தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் பேசுகையில், "இந்த விபத்து மிகவும் வேதனையானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.  முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்" என்று கூறினார்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கவனத்திற்கு இது!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • Share on

அண்மை பதிவுகள்