• vilasalnews@gmail.com

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

  • Share on

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாரதியார் 142வது பிறந்தநாள் விழா வீட்டு உபயோக எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.       

தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செந்தில் முருகன் இன்டன்  எரிவாயு ஏஜென்ஸிஸ் இணைந்து பாரதியார் 142வது பிறந்தநாள் விழா மற்றும் வீட்டு உபயோக எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடத்தியது.  

விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பத்மலதாராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் சம்பத் சாமுவேல் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். செந்தில் முருகன் ஏஜென்ஸிஸ் உரிமையாளர் ராஜீவி எரிவாயு விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் பாரதியார் பிறந்தநாள் வாழ்த்து கவிதை வாசித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆஸ்ட்ரோ மன்றம் தலைவர் எழிலன் வாழ்த்துரை வழங்கி பாரதியார் கவிதை புத்தகங்களை வழங்கினார். நிறைவாக சுபா ஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் நிஷா நன்றி கூறினார்.

  • Share on

பாரதியார் பிறந்த நாள் - எட்டயபுரம் நினைவு மண்டபத்தில் அதிமுக மரியாதை

தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை : 2 பேர் கைது!

  • Share on

அண்மை பதிவுகள்