• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமான நிறுவனம் ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

  • Share on

சேவைக் குறைபாடு காரணமாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமான நிறுவனம் 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

திருநெல்வேலி காந்தி நகரைச் சார்ந்த ஜெரின் ஜஸ்டஸ் என்பவர் அபுதாபியிலிருந்து தனது கர்ப்பிணி மனைவியுடன் திருவனந்தபுரம் செல்ல விமான பயணச் சீட்டு பெற்றிருந்தார். குறிப்பிட்ட நாளன்று அபுதாபி விமான நிலையத்திற்கு பயணம் செய்ய தனது மனைவியுடன் நேரில் சென்றுள்ளார். ஆனால் விமான நிறுவனம் அந்த குறிப்பிட்ட விமானப் பயணத்தை முன்னறிவிப்பு இல்லாமல் ரத்து செய்து விட்டது. 

அதன் பின்னர் ஏழு மணி நேரம் கழித்து மற்றொரு விமானத்தில் மும்பைக்கு சென்று மீண்டும் அடுத்த விமானத்தில் பயணம் செய்து திருவனந்தபுரம் சென்றடைந்துள்ளனர். மேலும் பயணம் செய்த ஒரு பயணியின் லக்கேஜ் பெட்டி மட்டுமே வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கர்ப்பிணிப் பெண் மாற்று உடை இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெரின் ஜஸ்டஸ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,  நமச்சிவாயம் ஆகியோர் விமான நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூபாய் 2 இலட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூ.2,10,000-ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய போட்டி - மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகளை வழங்கினார்

தூத்துக்குடி மாநகரில் நாளை ( நவ.,30 ) மின்தடை!

  • Share on

அண்மை பதிவுகள்