• vilasalnews@gmail.com

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் : எஸ்பி சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

  • Share on

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவரும் வேளாண் விற்பனைகுழு உறுப்பினருமான திருப்பாற்கடல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், முன்னாள் மீன் வளர்ச்சி கழக தலைவர் அமிர்தகணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை மற்றும் 

தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




  • Share on

காவல்துறை - பொதுமக்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா

மழைநீர் தேக்கத்திற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம் - கனிமொழி

  • Share on

அண்மை பதிவுகள்