• vilasalnews@gmail.com

பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவில் விதிமுறைகளை மீறிய 19 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 19 வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி  மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மீதும், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 இரு சக்கர வாகனங்கள் மீதும், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு இரு சக்கர வாகனமும், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கனரக வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் மீதும் என மொத்தம் 2 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 19 வாகனங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவுபடி தூத்துக்குடி உட்கோட்டத்தில் 7 இடங்களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 7, திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 6, ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 7, மணியாச்சி உட்கோட்டத்தில் 6, கோவில்பட்டி உட்கோட்டத்தில் 9, விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 9 மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 6 இடங்கள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 68 உதவி ஆய்வாளர்கள் உட்பட 160 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி வாகன சோதனையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றம் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் மதுபோதையில் கார், ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 3 பேர் கைது

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் : பகவதி அம்மன் கோயிலில் தூத்துக்குடி அதிமுக மாமன்ற உறுப்பினர் சிறப்பு வழிபாடு!

  • Share on

அண்மை பதிவுகள்