• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் - பொதுமக்களிடம் இருந்து வட்டாட்சியர் மனுக்களை பெற்றார்!

  • Share on

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 8ஆம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு முகாம் இன்று 8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட பொது விநியோகத்திட்டம் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து தூத்துக்குடி வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லத்துரை பெற்றுக்கொண்டார்.

  • Share on

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஆளுநரின் கருத்திற்கு எதிராக சமக கண்டன ஆர்ப்பாட்டம் - தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

ஏப்.,15ல் ரயில் மறியல்... ஏப்.,30ல் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை... தொடரும் காங்கிரஸ் தொடர் போராட்டம்!

  • Share on

அண்மை பதிவுகள்