• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் - மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் ஆய்வு!

  • Share on

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் மற்றும் பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்கான சிறப்பு முகாம் 21.01.2023 இன்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை தூத்துக்குடி டூவிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற்றது.

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரி செய்து வழங்கப்பட்டது. 

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றமும் செய்யப்பட்டது.

இம்முகாமினை, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வ குமார், வட்ட வழங்கல் தனி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லத்துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் : தனியார் வங்கி ஊழியர் மீது இளம்பெண் புகார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை நிறுவனங்கள் அத்துமீறல் - கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் போர்க்கொடி!

  • Share on

அண்மை பதிவுகள்