• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிறந்த நாள் : 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

  • Share on

கனிமொழி எம்பி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு வி.எம்.எஸ். நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதா முருகேசன் தலைமை வகித்தார். 

அவைத்தலைவர் அந்தோணி முத்துராஜா, செயலாளர் முருகன், ஞானக்கண், லெட்சுமி, பொருளாளர் செல்வகுமார், வட்ட பிரதிநிதிகள் மகேஸ்வரன், பாலமுருகன், ஆட்டோ குமார், படையப்பா, கிருஷ்ணன் பிள்ளை, நிர்வாகிகள் முத்துராஜ், முருகேசன், மாரியப்பன், கிருபை மணி, முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு தையல் மிஷன், அயர்ன் பாக்ஸ், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேருக்கு, முதல் பரிசாக குளிர்சாதனப் பெட்டியும், இரண்டாம் பரிசாக வாசிங்மிஷின், மூன்றாம் பரிசாக எல்இடி டிவியும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ் மோகன் செல்வின், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமன், மகளிரணி நிர்வாகள் ரேவதி, சந்தனமாரி, கவுன்சிலர்கள் ஜான்சிராணி, இசக்கிராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, மகளிரணி துணை அமைப்பாளர் பார்வதி மற்றும் மணி, அல்பர்ட், பிரபாகர், வட்ட செயலாளர்கள் பாலு, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் கனிமொழி பிறந்த நாள் விழா : அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

மேலதட்டப்பாறை கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மாட்டு வண்டி பந்தயம்!

  • Share on

அண்மை பதிவுகள்