• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

  • Share on

தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு  வெடிக்கும் என்று கூறி விட்டு போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

உடனடியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.  ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் போலீசாரும் சேர்ந்து அந்த மர்ம நபர் வெடி குண்டு இருக்கும் இடத்தை போனில் சொன்னது போல் தேடினார்கள். மேலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலையத்துக்கு வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். 

இந்த நிலையில் பயணிகள் ரயில் நிலையத்துக்கு வர தொடங்கினார்கள். அவர்களை கடும் சோதனைக்கு பின்னாடி அனுமதித்தனர். மேலும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ள 24 பெட்டிகளையும் சல்லடை போட்டு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் ரயில் பயணிகள் அனைவரும் நிம்மதி அடைந்தனர். மேலும் 8.20க்கு செல்ல வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் அரை மணி நேரம் தாமதமாக 8.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

போனில் பேசிய அந்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குரும்பூர் அருகே உள்ள சேதுக்குவாய்க்கால் கிராமத்தில் இருந்து அந்த போன் வந்தது தெரியவந்தது. உடனடியாக குரும்பூர் காவல் நிலைய போலீசார் அந்த கிராமத்துக்கு சென்று போனில் பேசிய மணி மகன் கணேசமூர்த்தி (42) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் அவரிடம் ஒரு வெடிகுண்டு பெட்டி இருப்பதாக போனில் தெரிவிப்பது போல் அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள் சோதனையில் வெடிகுண்டு பெட்டி எதுவும் சிக்கவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை!

துாத்துக்குடி மாநகர ஓ.பி.எஸ்., அணி புதிய மாவட்ட செயலாளர் நியமனம்!

  • Share on

அண்மை பதிவுகள்