• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்கள் காணொலிக் காட்சி கலந்துரையாடல்!

  • Share on

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நடத்தினார்.

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 9ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக  ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒவ்வொரு  வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து நவம்பர் 10ம் தேதிக்குள் தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த  வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும்-வாக்குச்சாவடி குறித்து முழுமையாக தெரிந்தவராகவும், களப்பணி செய்பவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து திமுக தலைமைக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக 12ம் தேதி (இன்று) கலந்துரையாடல் மேற்கொண்டார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 

அதன் ஒருபகுதியாக,  தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடந்திய கலந்துரையாடல் கூட்டமானது, புதுக்கோட்டையில் தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது.

அப்பொழுது மு.க.ஸ்டாலின் பேசுகையில்:

பொதுக்குழுவில் எடுத்த முடிவு படி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 நாம் அடைய வேண்டும். தேர்தல் பணியை தொடங்க வேண்டும். பூத் கமிட்டியை 234 தொகுதிகளிலும் நாம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் உங்களை சந்திக்கிறேன். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகள் உள்ளன. இதை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது தேர்தல் நேரத்திற்கு மட்டுமல்ல, தொடர்ந்து பணியாற்றுவதற்குதான். எப்போதும் மக்களோடு மக்களாக நாம் செயல்பட வேண்டும். 

இந்த பூத் கமிட்டியில் உள்ளவர்கள் கழக தோழர்களோடு இணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் இது தான் திராவிட மாடல் ஆட்சி. அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும். என்று உறுதி கொள்ள வேண்டும். இன்று நாளை மற்றும் 26 27 தேதிகளில் நடைபெறுகின்ற முகாம்களை பயன்படுத்திக்கொண்டு 2023 18வயது பூர்த்தியடைபவர்களை புதிய வாக்காளர்களாக இணைக்க வேண்டும். மக்கள் பணி தான் நமது பணி. 18 மாதம் நாம் நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்படி இல்லை. பணம் சூருட்டல். நிதி நிலை அதாள பாதளத்தில் இருந்தது. அப்படி பட்ட சூழ்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து கொரோனா, அடுத்து மழை வெள்ளம் பல்வேறு நிகழ்வுகளை தாண்டி மக்கள் பணியாற்றி பல்வேறு வளர்ச்சி பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்பதுதான் நமது தாரக மந்திரம். கழகத்தின் ஆணி வேராக இருப்பது தொண்டர்கள் தான். அந்த தொண்டர்களின் உழைப்பின் மூலம் 234 தொகுதிகளிலும் முழுமையாக பணிகள் நடைபெறுகிறதா என்பதை தலைமை கழகம் கண்காணிக்கும் அவ்வப்போது நானும் தொடர்பு கொள்வேன். அனைவரும்  நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என தெவித்தார்.

இக்கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமார் ரூபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் மணி, மாடசாமி, ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு சரவணக்குமார், ஓட்டப்பிடாரம் இளையராஜா, தூத்துக்குடி வடக்கு சுப்பிரமணியன், மத்திய ஒன்றியம் ஜெயக்கொடி, கருங்குளம் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொண்டரனி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் கல்பனா, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், ராஜ்குமார், நாகராஜன், சப்பாணிமுத்து, கோபால், நெல்சன், அவைத்தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், நாராயணன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, கிளைச்செயலாளர்கள் காமராஜ், பால்மணி, மற்றும் கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

குடியிருப்பு அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் போராட்டம்!

ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 153-வது பிறந்த நாள் விழா - சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை!

  • Share on

அண்மை பதிவுகள்