• vilasalnews@gmail.com

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு பணிகள் - எஸ்பி நேரில் ஆய்வு

  • Share on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன்  நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (12.06.2022) வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனை முன்னிட்டு  திருச்செந்தூர் கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (11.06.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரிமனோகரி உட்பட போலீசார் உடனிருந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 30வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் - நாளை ( ஜீன் 12 ) 917 மையங்களில் ஏற்பாடு

தடைசெய்யப்பட்ட புகையிலை, கூலிப்ஸ் பாக்கெட்டுகளுக்கு எதிராக அதிரடி ரெய்டு - 19 பேர் கைது...930 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்!

  • Share on

அண்மை பதிவுகள்