• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு பெருமை சேர்க்கும் தூத்துக்குடியை சேர்ந்த நிர்வாகி சிசில் குமார்

  • Share on

தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு பெருமை சேர்க்கும் சிசில் குமார்

தமிழகத்தில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகியவர் கமல்ஹாசன் இவரது நடிப்பின் மூலம் மத்திய, மாநில அரசின் விருதுகள் பல பெற்றுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரோடு நட்புறவை வளர்த்துக் கொண்டு தனக்கென்று தனி முத்திரை பதித்தவராவார்

தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்ட கமல்ஹாசன் பின்னர், நற்பணி மன்றமாக மாற்றம் செய்து தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் பல்வேறு பணிகளை அவரது நிர்வாகிகள் செய்து வந்தனர். 

தமிழக அரசியலில் புதிய தொடக்கமாக பலர் திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்ததை போல் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பல தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குறுதிகளை பெற்று சாதனை படைத்தார். 

அதன் பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்ட பலரும் வாக்கு வங்கிகளை நல்ல முறையில் பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருந்த போதிலும் அடுத்து நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.

பல மாவட்டங்களில் மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் பரிந்துரையின்படி மாநகர செயலாளராக பொறுப்பேற்றுள்ள சிசில் குமார், கமல்ஹாசன் வழிகாட்டுதலின்படி மாநகர பகுதியில் தன் இயக்கத்தை வளர்ச்சி அடையும் வகையில் பணியாற்றி வருகிறார்.

மக்கள் குறைகள் மட்டுமின்றி பொது மக்கள் சார்ந்த குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்வதில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறார். விரைவில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் 60 வார்டு பகுதிகளிலும் தலைமை கட்டளையின்படி பணியாற்றுவதற்கு இயக்க தொண்டர்களோடு பம்பரமாய் சுற்றி வருகிறார்.

தான் சார்ந்த இயக்கத்திற்கு பெருமை சேர்ப்பதில் தனது கடமை உணர்வோடு செயல்படும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற 504 பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு!

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தல்: பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • Share on

அண்மை பதிவுகள்