தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இரு நாள்கள் நடைபெறும் அதிமுக கழக அமைப்பு தேர்தல் நாளை (22) தொடங்குகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை:
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட கழுகுமலையில் ஸ்ரீ காளீஸ்வரி மேட்ச் ஒர்க்ஸ், கயத்தாறு பேரூராட்சி பகுதிக்கு சிவநாராயணன் திருமண மஹாலிலும், கயத்தாறு கிழக்கு ஒன்றியத்திற்கு குருவிநத்தம் திருக்குடும்பம் திருமண மஹால், மேற்கு ஒன்றியம் கயத்தாறு சிவநாராயண திருமண மஹால், கடம்பூர் பேரூராட்சி கழக தேர்தல் கட்சி அலுவலகத்திலும்,
கோவில்பட்டி நகரம், கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றிய பகுதி தேர்தல் கோவில்பட்டி ராஜமீரா திருமண மண்டபத்திலும், விளாத்திகுளம் பேரூராட்சி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு ஆர்.பி.கே. திருமண மஹாலிலும்,
புதூர் பேரூராட்சி, கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் தேர்தல் புதூர் கம்மவார் திருமண மண்டபத்திலும், எட்டயபுரம் பேரூராட்சி மற்றும் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தேர்தல் எட்டயபுரம் சந்திரலட்சுமி திருமண மண்டபத்திலும்,
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் குறுக்குச்சாலை எம்.எஸ்.பி. திருமண மஹாலிலும், மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூர் ரைஸ் மில் மண்டபத்திலும், தூத்துக்குடி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தேர்தல் புதுக்கோட்டை லட்சுமி மண்டபத்திலும், கருங்குளம் தெற்கு ஒன்றியம் தேர்தல் கருங்குளம் சந்தனமாரியம்மாள் கோயில் திருமண மண்டபம், வடக்கு ஒன்றியம் பொட்டல்ஊரணி பாலாஜி மண்டபம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி காமராஜ் நகர் ஆரூண் மண்டபத்திலும் கழக அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது.
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அதிமுக கொள்கை பரப்பு செயலர் பாப்புலர் வி.முத்தையா, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலர் ஜாண்தங்கம் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாகவும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அமைப்பு தேர்தல் சிறப்பாக நடைபெற, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது