• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவியுங்கள் - ஓட்டுனர்களிடம் எஸ்பி வேண்டுகோள்!

  • Share on

காவல்துறைக்கு உறுதுணையாக சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்க ளுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் ஓட்டுனர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறை சார்பாக மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராசி மஹாலில் இன்று (27.09.2021) பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோரை அழைத்து தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில் :

நீங்கள் அனைவரும் காவல்துறையினரைப் போலவே ஆங்காங்கே சுற்றிக் கொண்டு வருபவர்கள், உங்களுக்கு நகரில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களுக்கு தென்படும், அவ்வாறு தென்படும் பட்சத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறு வது தெரியவந்தாலோ, தங்களது வாகனங்களில் சந்தேகத்திற் கிடமான வகையில் எவரேனும் பயணம் செய்வதாக இருந்தாலும், சட்டவிரோதமாக துப்பாக்கி, கத்தி, அரிவாள், கஞ்சா மற்றும் போதைப் பொருள் போன்றவற்றை எடுத்து செல்வதாக இருந்தாலோ காவல் துறையின் அவசர இலவச தொலை பேசி எண். 100 அல்லது மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 95141 44100 என்ற எண்ணிற்கோ தகவல் அளிக்கலாம், இதில் வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தரக்கூடிய வசதியும் உள்ளது.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், மோட்டார் வாகன விதிமுறைகளை முழுவதுமாக கடைபிடிப்பதுடன் கண்டிப்பாக சீருடை அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும், தனியார் வாகன ஓட்டுனர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று போன்றவற்றை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். வாகனத்தில் கண்டிப்பாக தொலைக் காட்சி பெட்டிகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக திரைப்படங்களோ, பாடல்களோ ஒளிபரப்பவோ, இசைக்கவோ கூடாது. முக்கியமாக சமூதாயம் சார்ந்த பாடல்களோ, படங்களோ கண்டிப்பாக இருக்கக்கூடாது உட்பட பல்வேறு கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேரூந்து, சிற்றுந்து, நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு, கலந்தாய்வுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துக்களை பின்பற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மத்தியபாகம் காவல் ஆய்வாளர்  ஜெயப்பிரகாஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், தென்பாகம் உதவி ஆய்வாளர் முத்துகணேஷ், நவநீத கிருஷ்ணன், மத்தியபாகம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுப்பிரமணியன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா: சமத்துவ மக்கள் கழகம் மரியாதை!

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது!

  • Share on

அண்மை பதிவுகள்