• vilasalnews@gmail.com

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,23 ஆம் தேதி தேர்தல்!

  • Share on

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது.


தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரேதேசத்துக்கு இந்தாண்டு 2026 தேர்தல் நடைபெற உள்ளது.


இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகமான விக்யான் பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.


  • Share on

கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தது அ.தி.மு.க

  • Share on