2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார்.
இந்தக் குழுவின் முக்கிய வேலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் பிற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான். எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும், எந்தெந்தத் தொகுதிகளைக் கொடுக்கலாம் என்பதை இந்தக் குழுவினர் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.
கே.பி. முனுசாமி, M.L.A. ( அதிமுக துணைப் பொதுச் செயலாளர்)
திண்டுக்கல் சி. சீனிவாசன், M.L.A. ( அதிமுக பொருளாளர்)
எஸ்.பி. வேலுமணி, M.L.A. ( அதிமுக தலைமை நிலையச் செயலாளர்)
திருமதி பா. வளர்மதி ( அதிமுக மகளிர் அணிச் செயலாளர்)
ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

