• vilasalnews@gmail.com

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியிடும்?

  • Share on

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். அதன்படி இன்னும் 3 முதல் 5 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


அதேபோல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது. மேலும் மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.


மேலும் ஐந்து மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி நாளை (மார்ச் 15) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரிரு நாட்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் மாநிலங்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் மார்ச் 16ஆம் தேதிக்குப் பிறகே தேர்தல் ஆணையம் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


  • Share on

சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கில் சிஎஸ்கே எடுத்த முடிவு... இனி தலைவர் பாட்டு போடக்கூடாது!

  • Share on