• vilasalnews@gmail.com

நல்லகண்ணு காலமானார்!

  • Share on

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) காலமானார். 


சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவிற்கு கடந்த 1-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.


மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வந்தது.


இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.


இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து வந்தனர். நல்லகண்ணுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே இன்று ( 25.02.2026 ) பிற்பகல் நல்லகண்ணு காலமானார் என்ற அதிகாரபூர்வ தகவலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

  • Share on

தமிழக ரேஷன் கடைகளில் கட்டாய விற்பனை... பொதுமக்கள் புகார் - அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!

முற்றுப் பெற்றது ஒரு நேர்மையின் சகாப்தம்... கண்ணீரில் தமிழகம்!

  • Share on