• vilasalnews@gmail.com

விஜய்யின் ‘ஜனநாயகன்’ சாதனையை முறியடித்தார் சிவகார்த்திகேயன்!

  • Share on

தமிழ் திரையுலகில் தற்போது ‘பாக்ஸ் ஆபீஸ்’ சாதனைக்கு இணையாக யூடியூப் (YouTube) பார்வைகளும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. அந்த வகையில், தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட ட்ரெய்லர் சாதனையை, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட ட்ரெய்லர் முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. வெளியான நொடி முதலே இணையத்தில் தீயாய் பரவிய இந்த ட்ரெய்லர், வெறும் 24 மணி நேரத்திற்குள் 40 மில்லியன் (4 கோடி) பார்வைகளைக் கடந்து பிரமிக்க வைத்துள்ளது. இதன் மூலம் தமிழில் குறுகிய காலத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற ட்ரெய்லர் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.


இதற்கு முன்னதாக, விஜய்யின் கடைசிப் படம் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர், 24 மணி நேரத்தில் 34 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்தச் சாதனையை சிவகார்த்திகேயன் முறியடித்துள்ளார்.


‘பராசக்தி’ ட்ரெய்லர் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றதற்கு அதன் விறுவிறுப்பான படத்தொகுப்பு ஒரு காரணம் என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள இந்தித் திணிப்புக்கு எதிரான வசனங்கள் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜி.வி.பிரகாஷின் அதிரடியான பின்னணி இசை மற்றும் ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு ட்ரெய்லருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.


டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பாசில் ஜோசப் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வெளியாகவுள்ள இப்படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.


ஜனநாயகன் மற்றும் பராசக்தி என இரண்டு பெரிய படங்களும் மோதிக் கொள்வதால், இந்த ஆண்டு பொங்கல் ரேஸ் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப் போவது உறுதி.

  • Share on

விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் திட்டமிட்டபடி வெளியாகுமா? தடுப்பது யாரோ? கேள்வி எழுப்பும் தவெக நிர்வாகி!

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு சீல் வைக்கப்படுமா?பின்னணி இதுதானாம்!

  • Share on