• vilasalnews@gmail.com

திரைவிமர்சனம் : கலவையான விமர்சனத்தில் ' ரத்னம் ' - படம் எப்படி இருக்கு?

  • Share on

வேலூரில் எம்எல்ஏ-வாக உள்ள பன்னீர்செல்வத்தை (சமுத்திரக்கனி) கத்தியால் குத்தவரும் பெண்ணை கொலை செய்து பன்னீர்செல்வத்தின் உயிரை காப்பாற்றி சிறுவயதில் சிறைக்கு செல்கிறார் ரத்னம் (விஷால்). இதனால், பன்னீர்செல்வத்திற்கு ரத்னத்திற்கும் இடையே மாமா - மருமகன் என்ற அன்பு உறவுகள் உருவாகிவிடுகிறது.


வேலூருக்கு நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதவரும் மல்லிகா (பிரியா பவானிசங்கர்) மீது இனம்புரியாத அன்பு ரத்னத்திற்கு வருகிறது. மல்லிகாவை கொலை செய்ய, ஆந்திர மாநில எல்லைப் பகுதியின் தாதாக்களாக இருக்கும் பீமா ராயுடு (முரளி சர்மா), சுப்பு ராயுடு (ஹரீஷ் பேரடி) ராகவா ராயுடு (வேட்டை முத்துக்குமார்) என்ற மூன்று சகோதரர்களும் முயல, அதை முறியடிப்பதோடு, மல்லிகாவைப் பாதுகாப்பதையே முழுநேர பணியாகக் கொள்கிறார் ரத்னம்.

ரத்னத்திற்கும் மல்லிகாவைக் காக்க ஏன் இவ்வளவு சிரத்தையெடுக்கிறார், தாதாக்கள் ஏன் மல்லிகாவைத் துரத்துகிறார்கள், இறுதியில் ரத்னம் தாதாக்களை அழித்தாரா போன்ற கேள்விகளுக்கு ரத்த மழையால் நம்மை நனைத்து பதில் சொல்கிறது ஹரியின்  'ரத்னம்'.

தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பின்கதை, வில்லன்கள் துரத்த, ஹீரோயின் ஓட, ஹீரோ காப்பாற்ற எனத் திரும்பத் திரும்ப இதே பாணியிலான காட்சிகள்தான் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன. இவை ரசிகர்களுக்கு விருப்பத்தை தராவிட்டாலும், சண்டை வடிவமைப்பில் கனல் கண்ணன், பீட்டர் ஹீன், திலீப் சுப்புராயன், விக்கி ஆகியோரின் உழைப்பின் பலனைப் பார்க்க முடிகிறது. அவைகளே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும் ஓரளவிற்கு ஆறுதல் தருகிறது.

போலீஸும் ரவுடியும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்தாதான் ஊர் நல்லா இருக்கும், காசுக்காகக் கொலை பண்ற ரவுடி இல்ல. நான் கொள்கைக்காகக் கொலை பண்ற ரவுடி என பொழிந்துகொண்டே இருக்கும் வசனங்களை, இந்த காதில் வாங்கி அந்த காதில் வெளியேற்ற வேண்டியவை தான் படத்தில் வைத்துள்ளார் இயக்குநர் ஹரி.


வில்லன்கள் துரத்தம் ஹீரோயினை காப்பாற்ற ஹீரோ விஷால் இருக்க, விஷாலை காப்பாற்ற வேலூரில் எம்எல்ஏ சமுத்திரக்கனி இருக்கிறார் அவ்வளவு தான். மற்றபடி வேலூரில் எம்எல்ஏ-வாக உள்ள சமுத்திரக்கனி நல்வரா? கெட்டவரா? என்று யூகித்து கொள்ள முடியாத அளவிற்கு தான் அவரை பொருத்தியுள்ளனர். 

கதாநாயகிக்காக கத்தியையும், துப்பாக்கியையும் எடுத்து வில்லன்களை துரத்தம் விஷாலுக்கு என்று வைத்த பேக் ஸ்டோரி, விஷாலுக்கும் வில்லனுக்குமே ஒரு முன்பகை உள்ளதையும், அது தொடர்பாக உள்ள சம்மந்தங்கள் ஒவ்வொன்றாக காட்டிய விதம், ஹரி இன்றும் கமர்ஷியலில் புதிதாக செய்ய முயற்சிக்கிறார் என்பதை காட்டுகிறது.

மூன்று முறையும் நீட் தேர்வில் பாஸ் ஆகியும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல், நான்காவது முறை நீட் தேர்வு எழுதி பாஸ் ஆகி அரசு மருத்துவகல்லூரியில் கதாநாயகியை சேர வைப்பது

வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, நாய் சின்னத்தில், ஒரு நாயை நிறுத்தி ஓட்டுக்கு துட்டு கொடுத்தா அது ஜெயிக்கும்

எல்லாத்தையும் இலவசமா கொடுத்துட்டீங்களே, இனி கொடுக்க என்ன இருக்கு? என்று படத்தில் பேசப்பட்ட அரசியல் வசனங்களும், வைக்கப்பட்ட காட்சிகளும் பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளையும் லெப்ட் ரைட்டு வாங்கியதோடு, 

வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, நாய் சின்னத்தில், ஒரு நாயை நிறுத்தி ஓட்டுக்கு துட்டு கொடுத்தா அது ஜெயிக்கும் என்று ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களையும் ஒரு காட்டு காட்டியுள்ளார் இயக்குனர் ஹரி.


தாமிரபரணி, சாமி, சிங்கம் வரிசையில் இயக்குநர் ஹரியிடம் ரத்தினத்தை எதிர்பார்த்து செல்வதை தவிர்க்கலாம். ரத்தினம் விறுவிறுப்பு தான். ஆனால், சிறப்பு என்ற வாக்குறுதியை வழங்க ரசிகர்களிடையே தயக்கம் காட்ட வைக்கிறது.

  • Share on

ரிலீஸ் தேதியை அறிவிக்கும் படக்குழு... அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி தெரியுமா?

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பைசன் காளமாடன் - புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

  • Share on