• vilasalnews@gmail.com

பாலியல் படங்கள் தான் எடுத்தார்; ஆபாச படங்கள் எடுக்கவில்லை ; என் கணவர் அப்பாவி - நடிகை விளக்கம்!

  • Share on

பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட படங்களைத்தான் எடுத்தார் ஆபாச படங்கள் எடுக்கவில்லை எனது கணவர் அப்பாவி என நடிகை ஷில்பா ஷெட்டி கூறி உள்ளார்.

மும்பை மலாடு, மத் ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களாவில் ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் நடிகை வந்தனா திவாரியையும் கைது செய்து இருந்தனர். 

விசாரணையில் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ராவுக்கு (வயது45) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை கடந்த 19-ந் தேதி அதிரடியாக கைது செய்தனர். அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பிடிபட்ட கும்பல் மாடல் அழகிகளை ஆசை வார்த்தை கூறி ஆபாசபடங்களில் நடிக்க வைத்தது, பின்பு அதை செல்போன் செயலி மூலம் பதிவேற்றி அதில் கிடைக்கும் சந்தா பணத்தை வசூலித்து லாபம் சம்பாதித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து ராஜ் குந்த்ரா நேற்று மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது போலீஸ் தரப்பில் அவரது காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் போலீசார் தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து அதை விற்பனை செய்து பணம் சம்பாதித்து உள்ளார். 

அவரிடம் பெறப்பட்ட செல்போனில் தரவுகளை ஆய்வு செய்யவேண்டும். மேலும் அவரது வணிக நடவடிக்கைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும். எனவே அதற்கு கால அவகாசம் தேவை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவரின் போலீஸ் காவலை வருகிற 27-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதேபோல இவருடன் கைது செய்யப்பட்ட ரியான் தோர்பேவின் போலீஸ் காவலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இத்கிடையே நேற்று போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். வாக்கு மூலத்தில் தனது கணவர் ராஜ் குந்த்ரா நிரபராதி என்று ஷில்பா ஷெட்டி  கூறியுள்ளார். மேலும் ஷில்பா ஷெட்டி ஹாட்ஷாட்'களில் உள்ளடக்கத்தின் சரியான தன்மை குறித்து எனக்குத் தெரியாது. ஹாட்ஷாட்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. 

பாலியல் ஆசையைத் தூண்டும் நோக்கம் கொண்ட பாலியல் படங்களுக்கும்,  ஆபாச படங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டை அவர் வலியுறுத்தினார், மேலும் குந்த்ரா ஆபாச படங்கள்  தயாரிப்பதில் ஈடுபடவில்லை. அவர் ஒரு அப்பாவி என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.

ராஜ் குந்த்ராவின்  வியான் இன்டஸ்ட்டிரிஸ் நிறுவனமான இயக்குனராக நடிகை ஷில்பா ஷெட்டி செயல்பட்டதால் அவரிடம் விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் அந்த பதவியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

  • Share on

“பிக்கப் டிராப்"க்குத்தான் ஜோடியாகியுள்ளனர் வனிதா- பவர் ஸ்டார்!

தம்பியுடன் சூர்யா எடுத்த முதல் செல்பி.. நடிகர் கார்த்தி வெளியிட்ட புகைப்படம்

  • Share on