<p><b>தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டீசல் திருடியவரை போலீசார் கைது செய்தனர்</b>.</p><p>தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசூர் பகுதியில் தண்ணீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேற்படி நிறுவனத்தில் ஒரு டிராக்டரில் ஒரு பேரலில் 21 லிட்டர் டீசல் வைக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த 21 லிட்டர் டீசலை நேற்று (14.07.2022) மதுரை மாவட்டம் அய்யாப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அழகுராஜா (32) என்பவர் திருடி கையுங்களவுமாக பிடிபட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து மேற்படி நிறுவனத்தின் மேலாளர் ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பென்சன் வழக்கு பதிவு செய்து&nbsp; அழகுராஜாவை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 2,000 மதிப்பிலான 21 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தார்.</p>