தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி : மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நிருபர்
August 03, 2022
தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி : மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>தூத்துக்குடியில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற இரண்டு மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். </b></p><p>தூத்துக்குடி தபால் தந்தி காலனி 12-வது தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி பிரேமா (வயது 57). இவர் ராஜீவ்நகர் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அவர் அசோக்நகர் 5-வது தெருவில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள் வந்து உள்ளனர். அவர்கள் சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஒருவர் மட்டும் பிரேமாவின் பின்னால் நடந்து வந்து, அவர் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்று உள்ளார். </p><p>ஆனால் தங்க சங்கிலி அறுந்து பிரேமாவின் கைகளில் சிக்கி கொண்டது. அப்போது அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி நகை பறிக்க முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>