• vilasalnews@gmail.com

ஈரானின் புதிய உச்ச தலைவராக மௌஜ்தபா கமேனி நியமனம்: மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்!

  • Share on

மத்திய கிழக்குப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் புதிய சுப்ரீம் லீடராக மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி பொறுப்பேற்றுள்ளார்.


அணு ஆயுதக் கொள்கை தொடர்பான மோதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கின. இன்று ஐந்தாவது நாளாகப் போர் நீடித்து வரும் சூழலில், தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார்.


முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததை, தொடக்கத்தில் மறுத்த ஈரான் அரசு பின்னர் உறுதிப்படுத்தியது. இந்தச் சம்பவம் அந்நாட்டு ராணுவத்திடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


தங்கள் தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இப்பகுதியில் வரலாறு காணாத போர் பதற்றம் நிலவுகிறது.


அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, தற்காலிகத் தலைவராக அலிர்சா அராஃபி செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஈரானின் வல்லுநர்கள் சபை  அலி கமேனியின் 2-வது மகனான மௌஜ்தபா கமேனியை நிரந்தரத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. நீண்டகாலமாகவே தந்தையின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட மௌஜ்தபா, இப்போது போர்ச் சூழலில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

  • Share on

இந்தியாவுக்குப் பொருளாதாரப் போராக மாறுமா மத்திய கிழக்கு மோதல்? ஒரு விரிவான பார்வை!

  • Share on