• vilasalnews@gmail.com

இந்தியாவுக்குப் பொருளாதாரப் போராக மாறுமா மத்திய கிழக்கு மோதல்? ஒரு விரிவான பார்வை!

  • Share on

இந்தியா எந்த நாட்டுடனும் வலியச் சண்டைக்குப் போகாது, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது, ராணுவம் என்பது தற்காப்பிற்கு மட்டுமே - இதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. ஆனால், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் மோதல் போக்கு, இந்தியாவை ஒரு இக்கட்டான 'தர்ம சங்கடமான' நிலைக்குத் தள்ளியுள்ளது. மத்திய கிழக்கில் போர் மூண்டால், உலகிலேயே மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கப்போகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 


இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% க்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்கிறது. இதில் பெரும் பகுதி ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்தே கிடைக்கிறது.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதால் குறைந்தவிலையில் கச்சா பெறுவது நின்றுவிட்டது. அமெரிக்கா சொல்வது தான் விலை என்கிற நிலையில் தான் உலகம் இருக்கிறது.தற்போது அமெரிக்க தான் போரை தொடங்கி உள்ளது. 


பொதுவாக அரபு நாடுகளில் போர் ஏற்பட்டால் எண்ணெய் விலை விண்ணைத் தொடும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். ஈரான் இந்த நீர்சந்தியை மூடினால், இந்தியாவிற்கு வரும் எண்ணெய் கப்பல்கள் முடங்கும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். போர் வெடித்தால் இவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும்.


வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் பெரிய பலம். போர் ஏற்பட்டால் அந்த வருவாய் நின்றுவிடுவதுடன், லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தாயகம் திரும்பும் நிலை ஏற்படும். ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் இந்தியா பெரும் முதலீடு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இது மிக முக்கியமானது. ஒருவேளை போர் தீவிரமடைந்தால், இந்தியாவின் இந்த நீண்டகால முதலீடுகள் வீணாகும் அபாயம் உள்ளது.


இந்தியாவுக்கு இஸ்ரேல் ஒரு முக்கியமான ராணுவக் கூட்டாளி; அதே சமயம் ஈரான் ஒரு நீண்டகால நண்பன். ஒரு பக்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அழுத்தம், மறுபக்கம் ஈரானுடனான எரிசக்தி மற்றும் நட்புறவு என இந்தியா இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறது.


மற்ற நாடுகளுக்கு இது "அரசியல் போர்" என்றால், வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட இந்தியாவிற்கு இது ஒரு "பொருளாதாரப் போர்". இத்தகைய மோதல் இந்தியாவின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளிவிடும் என்பதால் தான், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் "அமைதி பேச்சுவார்த்தை" மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

  • Share on

அமெரிக்க போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதா ஈரான்? குவைத்தில் பெரும் அதிர்ச்சி!

ஈரானின் புதிய உச்ச தலைவராக மௌஜ்தபா கமேனி நியமனம்: மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்!

  • Share on