• vilasalnews@gmail.com

பல ஆண்டுகளாக முற்றுகையில் இருக்கும் காசா - அங்கு நடப்பது என்ன?

  • Share on

கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட பகுதியாக காசா பகுதி திகழ்கிறது. மத்திய தரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட இந்த பகுதி வெறும் 40 கி.மீ நீளமும், 10 கி.மீ அகலமும் கொண்டது.

வடக்கு காசா, காசா நகரம், டெய்ர் அல் பலா, கான்யூனிஸ் மற்றும் ரஃபா என 5 மாகாணாங்களை கொண்ட காஸா நிலப்பரப்பு வெறும் 365 சதுர கிலோ மீட்டர் தான். முதலில் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காசா நிலப்பரப்பு, பின் 1967 ல் மத்திய கிழக்கு போரின் போது இஸ்ரேல் வசமானது. ஆனால் காசாவை கைப்பற்றிய பிறகு 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் படைகள் அங்கிருந்து வெளியேறியதும் அடுத்த ஆண்டே பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆனால் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை அங்கிகரிக்கவும், ஆயுத போராட்டத்தை கைவிடவும் மறுத்தது.

இதையடுத்து 2007ஆம் ஆண்டு காசாவை ஹமாஸ் அமைப்பு கைப்பற்றியது. அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நான்கு முறை காசா மீது இஸ்ரேல் நடத்திய போரில், இதுவரை 6407 பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 308 இஸ்ரேலியர்கள் இந்த தாக்குதலில் பலி ஆகியுள்ளனர். காசாவில் ஹமாஸ் வெற்றிபெற்ற பிறகு அங்கிருந்து பொருட்கள் மற்றும் மக்கள் வெளியே வருவதை முற்றிலுமாக தடுத்தது இஸ்ரேல். 

எகிப்தும் காசாவின் தென்பகுதி எல்லையை மூடியது. நடமாடும் சுதந்திரத்தை இழந்த காசா மக்கள், உலகின் மிக அதிக ஜனத்தொகை அடர்த்தி உள்ள இந்த பகுதியில் நெருக்கடியான சூழலில் பாதிக்கும் மேல் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்ரேலில் கட்டுமானம் மற்றும் விவசாய வேலை செய்ய காசாவை சேர்ந்த 18500 ஆண்களுக்கு அனுமதி அளித்தது. 

இப்படி கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதி என அனைத்திலும் போதிய வசதி கிடைக்காமல் 5 சதவீதத்திற்கும் குறைவான சுத்தமான தண்ணீர் மட்டுமே கிடைக்கக் கூடிய சூழலில் மின்சாரத்திற்கு கூட இஸ்ரேலையும் எகிப்தையும் நம்பி இருக்க வேண்டிய நிலையில், பல ஆண்டு முற்றுகையில் தங்கள் வாழ்நாளை கழித்து வந்த காசா மக்கள் ஏற்கனவே 16 ஆண்டுகளாக நான்கு போர்களை சந்தித்த நிலையில் தற்போது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போரில் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாக உள்ளனர்.

காசா எல்லை பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மக்களை அப்புறப்படுத்தி வரும் இஸ்ரேல் காசாவுக்கான மின்சாரம், எரிபொருள் மற்றும் பொருட்களின் சேவையை நிறுத்தி உள்ளது.

  • Share on

33 கொலை செய்த ரவுடிக்கு 1,310 ஆண்டுகள் சிறை!

தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனப்பெருங்குடிகளின் பேராதரவுடன் 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்!

  • Share on