• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

2020-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்....இன்று நிகழ உள்ளது.

  • Share on

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நவம்பர் 30 திங்கட்கிழமை அன்று நிகழ உள்ளது.

2020-ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது. சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம்.

இன்றைய நாள் நிகழப்போகும் சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இந்த சந்திர கிரகண நிகழ்வினை கார்த்திகை தீபம், கார்த்திகை பூர்ணிமா, கோல்டு மூன்,மூன் பிஃபோர் யூல், பீவர் மூன், ஓக் மூன், ச்சைல்டு மூன் என்ற பல பெயர்களில் நாசா அழைக்கிறது. பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் 'umbra' என்றும், புறநிழல் ஆங்கிலத்தில் 'penumbra' என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் இது, தெரிவுநிலை வானிலை நிலையைப் பொறுத்தது. இந்த நிலை மேகமூட்டமாகவும், பனிமூட்டமாகவும் இருந்தால், ஸ்கைகேஜர்கள் இந்த நிகழ்வைக் காண முடியாது.

இந்தியாவில், இந்த நிகழ்வு மதியம் 1:04 மணி முதல் மாலை 5:22 மணி வரை நிகழும். மேலும் 3:13 மணி அளயளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த சந்திர கிரகணத்தை கருவிகள் உதவியின்றி வெறும் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் நிலவை சுற்றி வரும் லூனார்ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் என்று அழைக்கப்படும் விண் சுற்றுக்கலத்திற்கு கிடைக்கும் சூரிய மின்னாற்றல் குறைவதைக் காண முடியுமாம்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அபாரம்

புரெவிப் புயலின் கோரத் தாண்டவம்; வேரோடு சாய்ந்த மரங்கள்... படகுகள் நாசம்...!

  • Share on