தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை காலை முதல் இன்று வியாழக்கிழமை தற்போது வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் லேசான சாரலுடன் வானம் மேகமூட்டத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை உண்டா என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 26.11.26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடையில் கடுமையான வெப்பம் நிலவியது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையிலும் போதுமான மழை கிடைக்காமல் ஏமாற்றத்தைத் தந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று நவ.,26 காலை தூத்துக்குடி மாநகரில் மேலாசன மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தவாறுதான் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்ல நேர்ந்தது. அதே போல இன்றும் நவ.,27 காலை தூத்துக்குடி மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் லேசான மழைதூரலுடன் காணப்பட்டு வருகிறது. இதனால், நேற்று போலவே நனைந்தவாறுதான் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லும் நிலை ஏற்படுமா? அல்லது மாவட்ட நிர்வாகத்தில் இருந்து விடுமுறை அறிவிப்பு வருமா என பெற்றோர்கள் காத்திருந்த நிலையில், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 26.11.26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். என்பது குறிப்பிடதக்கது.