• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மக்களே உஷார்... உங்கள் பகுதி இதில் இருக்கிறதா?

  • Share on

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நாளை (நவம்பர் 26) வியாழக்கிழமை மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட 110/22 கிலோவோல்ட் நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின்தடை ஏற்படும் பகுதிகள்


போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, எட்டயாபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சிவன் கோவில் தெரு, வ.உ.சி. சாலை, மீனாட்சிபுரம், வி.இ. சாலை, பங்களா தெரு, பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகர், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்


பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நேரத்தில் மின்சாரத்தைச் சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இந்த மின்தடை தொடர்பான தகவலை தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் டிப்பர் லாரி மோதி லாரி ஷெட் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழப்பு!

விளாத்திகுளம் அருகே கதறி அழுத விவசாயி – நெஞ்சை உலுக்கும் வீடியோ!

  • Share on