எட்டயபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் திலீபன் ( 36 ) என்பவர் ஓட்டி வந்த, மதுரையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த லாரியானது,
எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு பகுதியில், தூத்துக்குடியில் இருந்து இலைக்கட்டுகளை ஏற்றி சென்று கொண்டிருந்த மினி லோடு வேன், எதிர்பாராத விதமாக சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை தாண்டி எதிரே வந்த லாரி மீது மோதியது.
இந்தவிபத்தில், மினி லோடு வேனில் பயணம் செய்த, தூத்துக்குடி அமுதாநகர் 1 வது தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவலிங்கம் ( 35 ) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த திலீபன் காயமடைந்தார். அவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சிவலிங்கத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எட்டயபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.