தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, கீழ செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் முப்புலிங்கம் (வயது 23) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் லதா இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, முப்புலிங்கத்தைக் கைது செய்தார். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.