• vilasalnews@gmail.com

பெண்கள் வீட்டிற்குள் முடங்கும் காலம் மீண்டும் வருகிறதா? தூத்துக்குடியில் சௌமியா அன்புமணி சீற்றம்!

  • Share on

தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி கடும் கவலை தெரிவித்துள்ளார்.


சென்னையில் தொடங்கப்பட்ட 'மகளிர் உரிமை மீட்புப் பயணம்' 128 நாட்களைக் கடந்து, இன்று நெல்லை மாவட்டத்தில் நிறைவடைகிறது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழகத்தின் தற்போதைய பாதுகாப்பு சூழல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.


கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் பெண்கள் முன்னேறினாலும், நடைமுறை வாழ்க்கையில் 2 வயதுக் குழந்தை முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது.


தமிழகத்தில் கஞ்சா, மது மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளதே குற்றங்கள் பெருகக் காரணம். குறிப்பாக, பள்ளிப் பருவச் சிறுவர்கள் கூட குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது.


பெண்களுக்கு எதிரான 14,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைந்து முடிக்க 54 சிறப்பு நீதிமன்றங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 20 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.


பெண்கள் எப்போது எவ்வித பயமும் இன்றி தனியாக வீதியில் நடமாட முடிகிறதோ, அன்றுதான் உண்மையான மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்.


வேலையில்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாக மாறியுள்ளது. வெறும் அரசியல் மாற்றங்களை மட்டும் எதிர்பார்க்காமல், குடும்பங்களும் சமூகமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என அவர் வலியுறுத்தினார்.

  • Share on

தூத்துக்குடியில் அதிரடி : ஒரே நாளில் 5 பேர் மீது தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்தது!

கோவில்பட்டியில் கட்டுமானப் பணியின் போது சோகம்: மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு!

  • Share on