தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், விளாத்திகுளம் அடுத்த புதூரில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. சிறுதானியங்களின் நன்மைகள் மற்றும் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவருமான மார்கண்டேயன் இவ்விழாவில் கலந்துகொண்டு, சிறுதானிய திருவிழாவைத் தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக, விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான பல்வேறு வேளாண் உபகரணப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார், துணை இயக்குனர்கள் அல்லிராணி, தமிழ்ச்செல்வி, சுந்தர்ராஜ், உதவி இயக்குனர்கள் மலர்விழி, கண்ணன் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், ம வேலுச்சாமி, வெற்றி, தினகரன் மற்றும் கிளைச் செயலாளர்கள், இளைஞரணி அமைப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.




